மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்குவேன்- யுவராஜ் சிங் அறிவிப்பு!உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப தயாராகி வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்,2019 ஜூன் மாதம்,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது,தனது சர்வதேச ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்பட்டார், அந்த நேரத்தில் அவர் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தபோது,அணிக்கு யுவராஜ் போதுமானவர் என்று பலர் நம்பினர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக,இந்தியாவின் நீல நிற ஜெர்சியில் யுவராஜை ரசிகர்கள் பார்க்க முடியவில்லை.பின்னர்,மற்றொரு அதிர்ச்சியாக அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) அனுமதியைப் பெற்ற பிறகு,இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு டி20 தொடரில் அவர் தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில்,யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப தயாராகி வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும்,ஒரு வீடியோவை பகிர்ந்து அவர் கூறியதாவது:
“உங்கள் தலைவிதியை கடவுள் தீர்மானிக்கிறார்,மக்களின் கோரிக்கையின் பேரில் நான் பிப்ரவரியில் மீண்டும் களமிறங்குவேன்.உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.எனக்கு ஆதரவாக இருங்கள்.இது நமது குழு மற்றும் ஒரு உண்மையான ரசிகர் கடினமான காலங்களில் தனது ஆதரவை வெளிப்படுத்துவார்,” என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
எனினும்,யுவராஜ் இந்தியாவுக்காக விளையாடுவாரா? அல்லது டி 20 லீக்குகளுக்கு திரும்புவாரா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்,யுவராஜின் இந்த அறிவிப்பால்,கிரிக்கெட் ஆடுகளத்தில் நட்சத்திர பேட்ஸ்மேனான அவரை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட யுவராஜ்,அதிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு கட்டாக்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 127 பந்துகளில் 150 ரன்கள் விளாசினார். அதில் 21 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும்.
யுவராஜ் சிங் இதுவரை 17 சதம், 71 அரைசதம் என மொத்தம் 11,000 ரன்களை எடுத்துள்ளார்.மேலும்,148 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார். 2007 ஐசிசி உலக டி20 இரண்டிலும் இந்தியா வென்ற சிறந்த வீரர்களில் ஒருவராகவும் யுவராஜ் இருந்தார்.அவர் 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.
2012 ஆம் ஆண்டில், யுவராஜுக்கு மத்திய அரசால் இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025
இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025