காசுலாம் போச்சு .. ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியை பார்க்க டிக்கெட் புக் செய்த ரசிகர் ! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !!

IPL Scam

சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார்.

ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான எதிர்ப்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது, அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் பிளேஆப் வாய்ப்புக்காக மீதம் இருக்கும் 2 இடத்தில் ஒரு இடத்திற்க்காக கடைசி போட்டியில் விளையாடவுள்ளனர்.

இதெல்லாம் ஒரு முனையில் இருக்க ஐபிஎல் ரசிகர் ஒருவர் ஒரு மிகப்பெரிய மோசடியில் தற்போது சிக்கி உள்ளார். பணத்தை இழந்த அந்த நபர் ஆர்சிபி-சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட்டை பெறுவதற்கு இணயத்தில் தேடி திரிந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் ‘ipl_2024_tickets_24’ என்ற கணக்கையும் கண்டுள்ளார்.

பத்மா சின்ஹா ​​விஜய் குமார் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த இன்ஸ்டாகிராம் கணக்கின் உரிமையாளர் தன் மீது நம்பிக்கையைப் பெறுவதற்காக அவரது ஆதார் விவரங்கள் மற்றும் மொபைல் எண்ணைக் கூட அளித்து, அங்கீகரிக்கப்பட்ட ஐபிஎல் டிக்கெட் விற்பனையாளர் என்று கூறி இருக்கிறார்.

பணம் இழந்தவரும் அவரை நம்பி ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 2,300 என 3 டிக்கெட்டுகளுக்கான தொகையான ரூ.7,900 ரூபாயை அவருக்கு அனுப்பி டிக்கெட் பெற முயற்சித்திருக்கிறார். ஆனாலும், அந்த நபர் இ-டிக்கெட்டை (e-ticket) பெறவில்லை. இருந்தாலும் டிஜிட்டல் கோளாறு காரணம் டிக்கெட்டுகள் ஓபன் ஆகவில்லை என பல்வேறு காரணங்களை கூறி அந்த நபரை மீண்டும் மீண்டும் பணம் செலுத்த வைத்துள்ளார். அவரும் அதை நம்பி திரும்ப பணம் செலுத்தி உள்ளார்.

ரூ.67,000 த்தை நெருங்கிய போது சுதாரித்து கொண்ட அந்த நபர் பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டு சந்தேகபட்டு காவல் துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது போன்ற தவறான நடவடிக்கைகளுக்கு பணத்தை இழப்பதற்கு தவிர்க்க அதிகாரப்பூர்வ இணையங்களில் மட்டுமே டிக்கெட்டுகளை வாங்குமாறும் காவல் துறையினர் கிரிக்கெட் ரசிகர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்