உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா,பாகிஸ்தான் அணிகள் 6 முறை மோதியது.மோதிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை போட்டியி ல் ஏழாவது முறையாக மோதியது.
அப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இதனால் 7-வது முறையும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் குஜ்ரன்வாலா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்றும் மேலும் தற்போது கிரிக்கெட் வாரியத்தில் உள்ள தேர்வு குழுக்களிலும் அனைத்தையும் நீக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தக்க பதிலளிக்க வேண்டுமென கிரிக்கெட் வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருப்பவர் முன்னாள் கேப்டன் இன் சமாம் உக் ஹக் . நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் மூன்று புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 9 -வது இடத்தில் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி மீது ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர்.
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…