இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி (வயது 34) சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான மொயின் அலி இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 ரன்கள் மற்றும் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போது ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சென்னை அணிக்காக விளையாடி வரம் மொயின் அலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையடுவார் என்பது குறிப்பித்தக்கது. 2016ஆம் ஆண்டில் அவர் நான்கு டெஸ்ட் சதங்களை அடித்த போது, அவர் ஒரு சிறந்த வீரராக திகழ்ந்தார்.
2017 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கட்டுகளும், 2018-19 ஆம் வருடம் நடந்த இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.
தனது இரண்டாவது டெஸ்டில் இலங்கைக்கு எதிராக 108 ரன்கள் எடுத்த அந்த இன்னிங்ஸ் அவருக்கு மனா உறுதியை அளித்தது. இதனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகள் படைக்க உதவியது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவது சிறந்த ஆல் ரவுண்டராக உள்ளார்.
இந்த நிலையில், இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மற்றும் இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் ஆகியோருக்கு தான் சர்வதேச டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயின் அலி தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…