உலகக்கோப்பை தொடரில் 35ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதி வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சிக்ஸர் மழை மொழிந்தனர்.
இதனால் இறுதியாக 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை நியூசிலாந்து அணி குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரன் 108 ரன்கள், கேன் வில்லியம்சன் 95 ரன்கள், க்ளென் பிலிப்ஸ் 41 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 402 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கத்துலயே அப்துல்லா ஷபீக் விக்கெட்டை விட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின், களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களத்தில் இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஜமான் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.
NZvPAK : நியூசிலாந்தின் அதிரடி… பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் வெற்றி இலக்கு!
அதன்படி, அதிரடியாக விளையாடிய ஃபகார் ஜமான் 63 பந்துகளில் சதம் அடித்து நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்களை மிரட்டினார். கேப்டன் பாபர் அசாமும் சிறப்பாக விளையாடி வந்தார். இந்த சமயத்தில் பெங்களுருவில் மழை குறிக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 21.3 ஓவரில் 160 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஃபகார் ஜமான் 106, கேப்டன் பாபர் அசாம் 47 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் உள்ளனர்.
பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 242 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த சூழலில், போட்டி மழையால் நடைபெறவில்லை என்றால் பாகிஸ்தான் அணி வெற்றி பெரும் என கூறப்படுகிறது. ஏனென்றால், பாகிஸ்தான் DLS படி, நியூசிலாந்து அணியைவிட 10 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனால், மழையால் போட்டி ரத்தானால் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாவே அமையும் என்று கூறுகின்றனர். இருப்பினும், மழை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…