போலி ஃபிட்னஸ், கோலி-கங்குலி பிரச்சனை உள்ளிட்ட பல உண்மைகளை சேத்தன் சர்மா வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் தலைமைத் தேர்வாளர் சேத்தன் ஷர்மா, பிசிசிஐ-யில் நடக்கும் சில மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியிட்டுள்ளார். ஜீ மீடியாவின் ஸ்பை கேமராவில், சிக்கிய ஷர்மா வெளியிட்ட உண்மைகள் பிசிசிஐயை மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையும் உலுக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்திய அணியில் உள்ள சில பெரிய வீரர்களின் பெயரும் இதில் வெளிவந்துள்ளது.
ஜீ மீடியா நிறுவனம் நடத்திய இந்த பிரத்யேக நிகழ்வில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா, ஊசி ஊக்கமருந்து சோதனை, போலியான உடற்தகுதி, கங்குலி-கோலி சர்ச்சை என அதிர்ச்சிகரமான கருத்துகளை வெளியிட்டு சிக்கியுள்ளார்.
இதில் டீம் இந்தியாவில் எப்படி போலி ஃபிட்னஸ் ஊசி எடுத்துக்கொண்டு உடற்தகுதி காண்பிக்கப்படுகிறது மற்றும் கோலி-கங்குலி இடையே உள்ள பிரச்சனைக்கு யார் பொறுப்பு உள்ளிட்ட இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த சில மறைக்கப்பட்ட உண்மைகளை சேத்தன் சர்மா, வெளிப்படுத்தினார்.
வீரர்கள் உடற்தகுதியுடன் இல்லை, ஆனால் அவர்கள் விளையாட ஊசி போடுகிறார்கள். 80 சதவீத உடற்தகுதியுடன் கூட விளையாட தயாராக உள்ளனர், பிசிசிஐ யும் பெரிய நட்சத்திர வீரர்களின் போலி உடற்தகுதியை பெரிதாக கண்டுகொள்வதில்லை.
கோலி-கங்குலி பிரச்சனையில் இருவருக்கும் இடையே இருந்த ஈகோ தான் காரணம், ஒரு வீரர் வளர்ந்துவிட்டால் தன்னால் எதையும் செய்ய முடியும், யாரையும் வெல்ல முடியும் என்று நினைக்கிறார் போல… கங்குலியால் தான், கேப்டன் பதவியை இழந்ததாக விராட் கோலி கருதுகிறார். தேர்வுக்குழுவில் பிசிசிஐ அதிகாரிகள், நான் உட்பட 9 பேர் அங்கு இருந்தோம்.
விராட் கோலியிடம், கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகும் முன் ஒருமுறை யோசிச்சுப்பாருங்க என்று கங்குலி கூறியதை, கோலி தான் கேட்டிருக்கமாட்டார் என நான் நினைக்கிறேன் என்று சேத்தன் சர்மா கூறினார்.
மேலும் ரோஹித்துக்கு ஆதரவாக கங்குலி இதை செய்யவில்லை ஆனால் கங்குலிக்கு கோலியை பிடிக்காது, கோலி-ரோஹித் இடையே எந்த போட்டியும் கிடையாது. ஆனால் அவர்கள் தங்களை பெரிய பாலிவுட் நட்சத்திரங்களை போல் எண்ணிக் கொள்கிறார்கள், மேலும் பல கிரிக்கெட்டர்கள் தேர்வுக்குழுவிடம் தங்களது செல்வாக்கை பயன்படுத்துகிறார்கள் என்று சேத்தன் சர்மா கூறியதாக ஜீ மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…