IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், அதிரடி பேட்டிங் மற்றும் வலுவான பந்துவீச்சை கொண்டிருக்கும் ஐதராபாத் அணியுடன் நேற்றைய போட்டியில் மோதியது. ஐதராபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கி பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்தது.
இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் பெங்களுரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் ரசிகர்களும் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்த வெற்றிக்கு பிறகு பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியதாவது, கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் சிறந்த விளையாட்டை கொடுத்துள்ளோம். அதன்படி கடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்களில் தோல்வியை சந்தித்தோம். தற்போது ஐதராபாத்து அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுள்ளோம்.
ஒரு டீமாக நம்பிக்கை இருக்க வேண்டும் என்றால் போட்டியில் வெற்றி பெறுவது அவசியமான ஒன்று. அதாவது, வீரர்களிடம் என்னதான் நம்பிக்கை அளிக்கும்படி பேசினாலும் சிறந்த ஆட்டம் தான் உண்மையான நம்பிக்கையை அளிக்கும். எனவே, இந்த வெற்றியுடன் நாங்கள் இரவில் நிம்மதியாக உறங்குவோம்.
இந்த ஐபிஎல் தொடரில் போட்டிகள் வலுவாக உள்ளது என்றால் அணிகளும் வலுவாக உள்ளன. அதனால் 100% இல்லையென்றால் முடிவு நமக்கு சாதகமாக இருக்காது. விராட் மற்றும் க்ரீன் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டனர் என்றும் சின்னசாமி ஸ்டேடியம் எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், அங்கு பந்துவீசுவது கடினம் எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…