“இதுதான் சர்ப்ரைஸ்”.. நேருக்கு நேர் உரையாடும் கம்பிர்-கோலி! பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!

விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஒன்றாக அமர்ந்து நேருக்கு நேர் உரையாடும் ஒரு வீடீயோவை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

Virat - Gambhir

சென்னை : இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் ஒன்றாக அமர்ந்து நேருக்கு நேரு உரையாடும் பாதி தொகுப்புள்ள ஒரு வீடீயோவை பிசிசிஐ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடேயே ஒரு திடீர் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. மேலும், சமூக தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சுற்றுப்பயண தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதில் முதல் போட்டியாக நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியானது தொடங்கவுள்ளது.

இதற்கான பயிற்சியில் இரு அணிகளும் இருந்து வரும் நிலையில் பிசிசிஐ, கம்பீரும்-கோலியும் அமர்ந்து நேருக்கு நேர் உரையாடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும், இவர்களுக்கு இடையே நடைபெற்ற முழு உரையாடலும் BCCI.TV யில் விரைவில் வெளியிடுவதாகவும் பிசிசிஐ அந்த பதிவில் தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில் இருவரும் சிரித்து கொண்டே அரட்டை அடிப்பது இருவரின் ரசிகர்களையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. அதில் ஒரு கேள்வியாக, விராட் கோலி கம்பீரிடம், “நீங்கள் பேட்டிங் செய்யும்போது, எதிரணியினருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்போதாவது களத்தை விட்டு வெளியே சென்று அவுட் ஆகி விடலாம் என்று எண்ணம் எழுந்துள்ளதா?”, என்று கேட்பார்.

அதற்கு கம்பீர் சிரித்து கொண்டே, “என்னை விட உங்களுக்கு அதிக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும். அந்த கேள்விக்கு என்னை விட சிறப்பாக பதில் சொல்ல உங்களால் தான் முடியும் என்று நினைக்கிறேன்”, என்று கூறுவார். அதற்கு கோலியும் சிரித்து கொண்டே கம்பீரிடம் உரையாடுவார்.

இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு காரணம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு இடையே ஐபிஎல் தொடர்களில் பல முறை நேரடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டுள்ளது. அதெல்லாம் பயங்கர சர்ச்சையாகவும், பேசும் பொருளாகவும் அப்போது மாறி இருந்தது.

அதன்பிறகு அந்த பிரச்னை எல்லாம் முடிந்து தற்போது களத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.  அதனை தொடர்ந்து தற்போது இந்த வீடியோ தொகுப்பும் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்