Gautam Gambir : விராட் கோலியுடன் இருக்கும் நட்பை தவறாக சித்தரிக்கிறார்கள் என கவுதம் கம்பிர் சுட்டி காட்டி இருக்கிறார்.
இந்தியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கவுதம் கம்பிருக்கும், நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கும் முந்தய காலத்தில் சிறிய மனஸ்தாபம் இருப்பது நமக்கு தெரிந்ததே. அதன் பிறகு அந்த பிரச்சனையை பற்றி இணையத்தில் யாரும் பேசாமலே இருந்தனர். ஆனால் கடந்த 2023 ஆண்டின் போது லக்னோ அணியும், பெங்களூரு அணியும் ஒரு போட்டியில் மோதியது.
அந்த போட்டியின் போது லக்னோ அணியின் பந்து வீச்சாளரான நவீன்-உல்-ஹக்கிற்கும், விராட் கோலிக்கும் இடையே வாகு வாதம் நடைபெற்றது. இந்த வாக்கு வாதத்தில் அந்த வருடம் லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் முன் வந்து அந்த வாக்கு வாதத்தில் ஈடுபடுவார். அப்போது விராட் கோலியும் கம்பிருடன் வாக்கு வாதம் செய்வார்.
இது அப்போது பயங்கர சர்ச்சையாக மாறியது இந்நிலையில், மீண்டும் இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக திரும்பிய கம்பிர். இந்த ஆண்டு கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதிய ஒரு போட்டியின் முடிவில் விராட் கோலியிடம் முன் சென்று காய் கொடுத்து, கட்டி பிடித்திருப்பார்கள். இந்த நிகழ்வை ரசிகர்களும், பலதரப்புக்கு பத்திரிக்கைகளும் ‘இது ஒரு நாடகம் இருவருக்கும் இடையே ஒரு கருத்து வேறுபாடு உள்ளது அதை அவர்கள் மறைக்கின்றனர்’ என எழுதினார்கள்.
இதற்கு கவுதம் கம்பிர் பிரபல பத்திரிகையான டைம்ஸ் ஆப் இந்தியா (TOM)வில் கவுதம் கம்பிர் விராட் கோலியுடன் இருக்கும் சண்டையின் காரணத்தை முன்வந்து கூறி இருப்பார். அவர், “விராட் கோலி சொன்னது சரி தான். நாங்கள் கட்டி பிடித்தோம் ஆனால் அதையும் கலவையாக விமர்சித்து எழுதி இருந்தனர். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இது போன்ற விஷயங்களை பயன்படுத்தி அவர்களது டிஆர்பிகாக (TRP) ஐ ஏற்ற விரும்புகிறார்கள்”, என்று பத்திரிகையில் பேசும் பொழுது சுட்டி காட்டி பேசி இருந்தார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…