தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNBL) 7-வது சீசன் கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்று முன்தினம் நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் திருச்சி மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது. பிறகு, 130 என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி தொடக்கத்திலேயே தடுமாறியது என்றே கூறலாம்.
இந்த போட்டியில், சேப்பாக் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சிலம்பரசன் அருமையாக பந்து வீசி அணியை வெற்றிபெற வைத்தார் என்றே கூறலாம். ஏனென்றால், அந்த போட்டியில் மொத்தமாக அவர் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மொத்தமாக 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி அதிர வைத்தார். இதற்கான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவருடைய அபாரமான பந்துவீச்சே சேப்பாக் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே கூறலாம். மொத்தமாக திருச்சி அணி 13.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 71 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…