தல தோனி பெயிண்ட் அடிப்பது கூட மாஸ் தான்…வைரலாகும் புத்தம் புதிய வீடியோ…!
பயிற்சியின் இடையே கேப்டன் தோனி ரசிகர்கள் அமரும் இருக்கைகளுக்கு ஸ்ப்ரே கேன் மூலம் பெயிண்ட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேப்டன் கூல் என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படும் தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு அவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அவருடைய விளையாட்டையும் தாண்டி அவருடைய நல்ல குணத்திற்காகவே அவரை பலருக்கும் பிடிக்கும்.
A memory for eons to come! Super thanks for making it, fans! ????#WhistlePodu #Yellove ???? pic.twitter.com/FZYouEsde0
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2023
இந்த நிலையில் ரசிகர்களுக்காக தோனி பெயிண்ட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி உட்பட சென்னை அணி வீரர்கள், சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி செய்து வருகின்றனர்.
Nayagan meendum varaar… ????????#WhistlePodu #Anbuden ???? pic.twitter.com/3wQb1Zxppe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023
இதனையடுத்து, கேப்டன் தோனி மைதானத்திற்கு உள்ளே வரும் வீடீயோவை அணி நிர்வாகம் வெளியிட்ட நிலையில், மீண்டும் ஒரு வீடியோவை வெளியீட்டுள்ளது. அந்த வீடியோவில் மைதானத்திற்குள் ரசிகர்கள் அமரும் இருக்கைகளுக்கு ஸ்ப்ரே கேன் மூலம் சிஎஸ்கேயின் பாரம்பரிய மஞ்சள் நிறத்திலும், சில இருக்கைகளுக்கு நீல வண்ணம் நிறத்திலும் பெயிண்ட் அடித்தார்.
“???????????????????????????????????????? ???????????????????????????? ????????????????????????????”
Anbuden Awaiting for April 3???????? pic.twitter.com/eKp2IzGHfm— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023
மேலும், 16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.