‘புத்தகம் எழுதினாலும் அதிலும் ஃபினிஷிங் தோனி தான்’ .. – ஆகாஷ் சோப்ரா புகழாரம்
Akash Chopra : இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சொந்தமாக ஒரு யூடுப் சேனலை நடத்தி வருகிறார். அந்த யூடுப் சேனலில் இன்று காலை இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு மரியாதையை செலுத்தும் வகையில் அவரை புகழ்ந்து 18 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Read More :- NZvsAUS : வெற்றியை பெருமா நியூஸிலாந்து அணி ..? இன்னும் 258 ரன்கள் தேவை ..!
அந்த வீடியோவில் அவரது விளையாட்டு திறன், அவரது சிந்தனை, இக்கட்டான சூழ்நிலையில் விளையாடும் போது முடிவெடுக்கும் அவரது திறன் ஆகியவற்றை பற்றியெல்லாம் பேசி இருந்தார். அதிலும் முக்கியமாக அவரை புகழ்ந்தும் கூறி இருந்தார். அதை தோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில், ” கிரிக்கெட் வரலாற்றில் தோனியை விட ஒரு சிறந்த ஃபினிஷரை நான் பார்த்ததில்லை.
மேலும், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் பெவன் ஒரு டைனமிக் மிடில் ஆர்டர் பேட்டராகவும், ஃபினிஷராகவும் பார்க்கபட்டர். ஆஸ்திரேலிய அணிக்காக நிறைய போட்டிகளை மைக்கேல் பெவன் ஃபினிஷராக விளையாடி வெற்றி பெற செய்திருக்கிறார். அவரை போல தோனியும் இந்திய அணிக்காக செய்திருக்கிறார் ” என்று மைக்கேல் பெவனுடன், தோனியை ஒப்பிட்டு கூறி இருந்தார்.
Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கொண்ட அணி எது தெரியுமா ..?
மேலும் அவர் கூறுகையில், ” தோனி 2004-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அடுத்த மூன்றே ஆண்டுகளில் , 2007 டி20 உலகக் கோப்பையை கேப்டனாக இந்திய அணிக்காக பெற்று தந்தார். அதன் பிறகு, அவர் ஒரு ஃபினிஷர் என்ற பட்டத்தைப் பெற்றார். அவரது ஆரம்ப கட்டத்தில், அவர் மைக்கேல் பெவனுடன் அதிகம் ஒப்பிடப்பட்டார்.
ஆனால், ஒரு கேப்டனாக மைக்கேல் பெவனை விட சிறப்பாகவே இந்திய அணிக்காக செய்திருக்கிறார். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் இனி ஒரு புத்தகம் எழுதப்படுகிறது என்றாலே அதில் இறுதி அத்தியாயம் (Chapter) தோனியாக தான் இருப்பார். ஏனென்றால் கிரிக்கெட் வரலாற்றில் அவரை மிஞ்சும் ஒரு ஃபினிஷர் கிடையாது. அதனால், புத்தகம் எழுதினாலும் அதிலும் ஃபினிஷிங் தோனியாக தான் இருப்பார் “, என்று தோனியை புகழ்ந்து அந்த வீடியோவில் கூறி இருந்தார்.