Akash Chopra [file image]
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால் அதை விமர்சித்து ஆகாஷ் சோப்ரா பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் களமிறங்கிய ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது ராஜஸ்தான் அணி.
ராஜஸ்தான் அணிக்கு வழக்கம் போல இந்த போட்டி நல்ல விதமாக அமையவில்லை, பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன் பிறகு 3-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்த பராக் மற்றும் ஜெய்ஸ்வாலின் அதிரடியால் வெற்றியின் விழும்பு வரை ராஜஸ்தான் அணி சென்றது. இறுதி ஓவரில் அஸ்வினும், ரோமன் பவலும் களத்தில் இருந்தனர், அந்த ஓவரை ஹைதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார் வீசுவார்.
கடைசி பந்துக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், புவி அந்த பந்தை சிறப்பாக வீசுவார் அது போவலின் காலில் சென்று படும் அதற்கு களநடுவர் அவுட் கொடுப்பார். அதை மேல்முறையீடு செய்வதற்கு போவல் மூன்றாம் நடுவரிடம் அப்பீல் கேட்பார். ஆனால் அதில் அந்த பந்தில் டிஆர்எஸ் விதிப்படி அவர் அவுட் இல்லை என முடிவு வரும். ஆனாலும், ஹைதராபாத் அணி கிரிக்கெட் விதிப்படி வெற்றி பெற்றது என தீர்மானமாகும்.
இந்த டிஆர்எஸ் விதியை விமர்சித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பேசிஇருப்பார். இதை குறித்து அவர் கூறுகையில், “டிஆர்எஸ்ஸில் ஒரு பந்து ஸ்டெம்ப்பில் படவில்லை என்றால், ரோமன் பவர் அவுட் இல்லை என்றால் என்ன செய்வது? இது டிஆர்எஸ் விதியில் யோசிக்கப்படாத ஒன்றாகும் அதே நேரம் ஒருமுறை களநடுவர் அவுட் கொடுத்து விட்டால் விதிப்படி அந்த பந்து டெட் ஆகி விடுகிறது.
அதாவது அந்த பந்து ஒரு லெக் பை மூலமாக பவுண்டரி சென்றாலும் கூட, அப்பொழுது ரோமன் பவுல் டிஆர்எஸ் மூலம் அவுட் இல்லை என்றாலும் ராஜஸ்தான் தோல்வியடையும் அதே நேரம் ஹைதராபாத் அணிதான் வெற்றி அடையும். இது ஒரு அர்த்தமில்லாத விதியாக இருக்கிறது”, என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த டிஆர்எஸ் விதியை பற்றி பேசி இருந்தார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…