சென்னை கூட விளையாடுறதும் ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு…ஹர்பஜன் சிங் டிவிட்.!

Default Image

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 216 ரன்களை குவித்தது.

அடுத்ததாக 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்தில் அருமையாக விளையாடியது. அப்படி இருந்தும், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியின் வெற்றி சென்னை பக்கம் மெதுவாக திரும்புயது.

இறுதியில், லக்னோ 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில், சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இந்த சீசன் ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணியை பல கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், சென்னை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டிவிட் ஒன்றை செய்துள்ளார். அதில் ” சார் ரிலீஸ் ஆகியிருக்குற பத்துதல பாயும், விடுதலை வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க. அது கூட தல எம்.எஸ்.தோனி இந்த முறை ஐபிஎல் கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூட விளையாடுறதும்,ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு” என தமிழில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்