ENGvsSL: விறுவிறுப்பாக நடந்து நடைபெற்று வரும் 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 25 ஆவது லீக் போட்டியானது இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது.
இந்தத் தொடரை தோல்வியுடன் தொடங்கிய இங்கிலாந்து அணி, தாங்கள் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதே போலவே இலங்கை அணியும் தான் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி எட்டாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 78 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. அதில் 38 ஆட்டங்களில் இங்கிலாந்தும், 36 ஆட்டங்களில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கிடையேயான ஒரு ஆட்டம் சமமாக முடிந்துள்ளது. 3 ஆட்டங்கள் முடிவு இல்லை.
இந்த நிலையில் இந்த நடைபெறும் போட்டியானது இவ்விரு அணிகளுக்கும் ஒரு முன்னேற்றத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த இரண்டு அணிகளும் ரன்களை குவிக்கவும், விக்கெடுகளை வீழ்த்தவும் கடுமையாக முயற்சி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போது போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.
இலங்கை:
பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(w/c), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மத்தியூஸ், மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க
இங்கிலாந்து:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(w/c), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…