ENGvsSL: டாஸ் வென்றது இங்கிலாந்து.! பந்துவீச தயாராகும் இலங்கை.!

ENGvsSL Toss

ENGvsSL: விறுவிறுப்பாக நடந்து நடைபெற்று வரும் 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 25 ஆவது லீக் போட்டியானது இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது.

இந்தத் தொடரை தோல்வியுடன் தொடங்கிய இங்கிலாந்து அணி, தாங்கள் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதே போலவே இலங்கை அணியும் தான் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி எட்டாவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 78 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. அதில் 38 ஆட்டங்களில் இங்கிலாந்தும், 36 ஆட்டங்களில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கிடையேயான ஒரு ஆட்டம் சமமாக முடிந்துள்ளது. 3 ஆட்டங்கள் முடிவு இல்லை.

இந்த நிலையில் இந்த நடைபெறும் போட்டியானது இவ்விரு அணிகளுக்கும் ஒரு முன்னேற்றத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த இரண்டு அணிகளும் ரன்களை குவிக்கவும், விக்கெடுகளை வீழ்த்தவும் கடுமையாக முயற்சி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.

இலங்கை:

பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(w/c), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மத்தியூஸ், மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க

இங்கிலாந்து:

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(w/c), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்