பாகிஸ்தானுக்கு எதிரான 7ஆவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் வென்றது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி 7 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் வென்றுள்ள நிலையில், நேற்று 7ஆவது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பௌலிங் தேர்வு செய்து விளையாடியது.
இதன் படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேவிட் மலான் 47 பந்துகளில் 78* ரன்களும் (8போர்கள், 3சிக்ஸர்கள்), ஹாரி புரூக் 29 பந்துகளில் 46* ரன்களும் (1போர், 4சிக்ஸர்கள்) எடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 210 ரன்களை பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதன் பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் முதல் ஒவரில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அதற்கு அடுத்த ஓவரில் ரிஸ்வான் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்த பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஒக்ஸ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களும், டேவிட் வில்லி 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டேவிட் மலான், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடரையும் 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. ஹாரி புரூக், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…