#WorldCup2023: சதம் விளாசிய கான்வே, ரவீந்திரன்.. நியூசிலாந்து அபார வெற்றி ..!

ENGvNZ

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது கோலாகலமாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இன்று  முதல் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில்  இங்கிலாந்து அணியும்,  நியூசிலாந்து அணியும் மோதியது. அதன்படி இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர். பேர்ஸ்டோவ் நிதானமாக விளையாடி 4 பவுண்டரிகளை அடித்து விளாசினார். ஆனால் டேவிட் மாலன் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பிறகு களமிறங்கிய ஜோ ரூட் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், பேர்ஸ்டோவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து வந்த ஹாரி புரூக் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் 25, 11 ரன்கள் முறையே எடுத்து ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஜோ ரூட் 77 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 43 ரன்களிலும்,  லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ் சொற்ப ரன்கள் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த 282 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நியூசிலாந்து அணி 283 ரன்கள் இலக்குடன்அணியின் தொடக்க வீரர்களாக கான்வே மற்றும் வில் யங்  களமிறங்கினர். இவர்களின் கூட்டணியை சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில் யங் இரண்டாவது ஓவரிலே ரன் எடுக்காமல்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர்  ரச்சின் ரவீந்திரன் களமிறங்கினார்.

இதைதொடர்ந்து ரச்சின் ரவீந்திரன்,  கான்வே இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி கடைசி வரை இருவரும் ஆட்டம் இழக்காமல் களத்தில்  இருந்தனர்.இதில் கான்வே 121 பந்துகளில் 152* ரன்கள் குவித்தார். அதில் 19 பவுண்டரையும், 3 சிக்ஸர்களையும் விளாசினார். ரச்சின் ரவீந்திரன் 96 பந்தில் 123* ரன்கள் குவித்தார். அதில் 11 பவுண்டரையும், 5 சிக்ஸர்களையும் விளாசினார்.  இறுதியாக நியூசிலாந்து அணி 36.2 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(w/c), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):

டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(w/c), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மாட் ஹென்றி, மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், டிரென்ட் போல்ட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri