ENGvsNED: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இன்று, புனேவில் உலா மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் 40 ஆவது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியானது நெதர்லாந்து அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது.
இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து அணி ஏற்கனவே வெளியேறியதை தொடர்ந்து, இன்று நடைபெறுகிற லீக் போட்டியில் தனது திறமையை வெளிக்காட்ட களமிறங்குகிறது. நடப்புத் தொடரில் இதுவரை விளையாடிய ஏழு போட்டியில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன், 2 புள்ளிகளை எடுத்து தொடரை விட்டு வெளியேறியது.
நெதர்லாந்து அணி ஆனது 7 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருப்பதால் தொடரை விட்டு வெளியேறாமல் உள்ளது. ஏனென்றால் அந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், 8 புள்ளிகள் உடன் பட்டியலில் முன்னிலைக்கு சென்று விடும்.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை 6 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த ஆறு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை வீழ்த்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர்(w/c), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷித்
வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ்(w/c), பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…