ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!
நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் லிவிங்ஸ்டோன் 27 பந்துக்கு 62 ரன்கள் அடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்து தொடரையும் 2-2 என சமன் செய்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டோன் 27 பந்துக்கு 62 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றி இருந்தார்.
இவரது இந்த அதிரடியான ஆட்டம் ஒருவகையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது. மேலும், இந்த அதிரடியான ஆட்டத்தின் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரை சதத்தை பூர்த்தி செய்து சாதனைப் படைத்தார்.
இவரது இந்த அதிரடியான ஆட்டத்தை புகழ்ந்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான ஸ்டுவர்ட் பிரோடு பேசி இருக்கிறார்.நேற்று போட்டி முடிந்த பிறகு தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, “இங்கிலாந்து அணி லிவிங்ஸ்டனிடமிருந்து இதை தான் எதிர்பார்த்தது.
லிவிங்ஸ்டோன் எந்த ஒரு அணியிலும் நிரந்தரமாக இல்லை. இதை தான் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் தற்போது இந்த அதிரடியான ஆட்டத்தின் மூலம் தான் வெள்ளைப் பந்து அணிகளில் இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து தேர்வாளர்களுக்கு சரியாகக் நிரூபித்திருக்கிறார்.
அவருக்கு எப்போதும் அணியில் இடமுண்டு என்ற அளவிற்கு விளையாடி இருக்கிறார். அவரது அற்புதமான பலம், அற்புதமான சில ஷாட்கள் எல்லாம் கண்களை கவரும் வண்ணம் அமைந்தது. மேலும் அவர் இங்கிலாந்து அணியின் ஒரு சக்தி வாய்ந்த ஸ்ட்ரைக்கர்”, என ஸ்டுவர்ட் பிராட் பேசி இருந்தார்.