ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

இன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை DLS முறைப்படி வெற்றிப் பெற்றுள்ளது.

ENGvsAUS , 3rd ODI

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துளளது.

அதன்படி, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பேட்டிங் இறங்கிய மிட்சல் மார்ஷும் , ஹார்ட்டும் நிலைத்து விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்தும், க்ரீனும் நிதானமாகவே ரன்களை எடுத்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் க்ரீன் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரை பின் தொடர்ந்து லாபுசேன் ரன்கள் எதுவும் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து விளையாடிக் கொண்டிருக்க, தேவையான நேரத்தில் அவருடன் இணைந்து அலெக்ஸ் கேரியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரின் கூட்டணியால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் வலுவான நிலைக்கி எட்டியது. மேலும், இவர்களைத் தாண்டி மேக்ஸ்வெல் மற்றும் ஆரோன் ஹார்டியும் அவர்களது பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால், ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 60 ரன்களும், க்ரீன் 42 ரன்களும், அலெக்ஸ் கேரி 77 ரன்களும், மேக்ஸ்வெல் 30 ரன்களும், ஆரோன் 44 ரன்களும் எடுத்திருந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்கள் எடுத்திருந்தது.

அதே போல இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 305 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதல் 3 ஓவர்களுக்குள் தொடக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்து இங்கிலாந்து அணி 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின் ஜோடி இருந்த வில் ஜாக்ஸ் மற்றும் ஹாரி புரூக் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பவுலர்களை சமாளித்து இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்தே இங்கிலாந்து அணியை பாதி கரை சேர்த்தனர்.

இதில் வில் ஜாக்ஸ் துரதிஷ்டவசமாக 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின், களத்தில் அட்டகாசமாக விளையாடிக் கொண்டிருந்த ஹாரி புரூக் சதம் விளாசி அசத்தினார். சரியாக 37.4 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 254 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.

அப்போது இங்கிலாந்து அணிக்கு 74 பந்துகளில் 51 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரம் மழை குறுக்கிட்டு போட்டி தடைபெற்றது. இதனால் வெகு நேரமாகியும் போட்டியை நடத்த முடியாமல் போனது. இதன் காரணமாக DLS முறைப்படி ஒப்பிட்டு பார்க்கையில் இங்கிலாந்து அணி வலுவாக இருந்தது.

இதன் காரணமாக 46 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இந்த போட்டியை DLS முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் 110* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதே போல ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் மற்றும் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தனர்.

மேலும், இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட 50 ஓவர் தொடரில் 1-2 என பின்னிலை வகித்து வருகிறது. மேலும், இது வரை நடைபெற்ற 3 ஆட்டத்தில் 2 போட்டிகளை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரில் 4-வது மற்றும் அடுத்த போட்டி வரும் செப்-27ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்