ENGvsAUS: டாஸ் வென்றது இங்கிலாந்து.! பேட்டிங் செய்ய களமிறங்கும் ஆஸ்திரேலியா..!

ENG vs AUS

ENGvsAUS: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரானது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் பெங்களுருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பலப்பரிட்சை செய்கிறது.

இதனை அடுத்து இரண்டாவதாக நடைபெறும் 36 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் 8 புள்ளிகளை பெற்ற ஆஸ்திரேலியா, புள்ளி விவரப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல இங்கிலாந்து அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றதால், புள்ளி விவரப் பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை 155 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளது.

இதில் ஆஸ்திரேலியா 87 முறை இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல இங்கிலாந்து அணி 63 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டையிலும், மூன்று போட்டிகள் முடிவுகள் இல்லாமலும் முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகிறது.

இதில் தற்பொழுது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளதால், ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.

இங்கிலாந்து:

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(w/c), மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (W), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்