ENGvsAUS: இங்கிலாந்து பந்துவீச்சில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்.! 287 ரன்கள் இலக்கு..

England Cricket

ENGvsAUS: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் 36 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். இருவரும் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காமல் 11 மற்றும் 15 முறையே ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

இதனையடுத்து ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினார்கள். இதில் ஸ்டீவன் ஸ்மித் 52 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்து 44 ரன்களுடன் வெளியேற, ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினார். அவரும் வந்த சில நிமிடத்தில் களத்தை விட்டு வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருக்க, மறுபுறம் லாபுசாக்னே பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். இவருடன் கேமரூன் கிரீன் இணைந்து பொறுப்பாக விளையாடினார். லாபுசாக்னே தனது விக்கெட்டை இழந்த பிறகு  கேமரூன் கிரீனும் 3 ரன்களில் அரைசதத்தைத் தவறவிட்டு 47 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இவர்களையடுத்து விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு ரன்கள் எடுத்து, அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஜோஷ் ஹேசில்வுட் களத்தில் இருந்தார். முடிவில் 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே 71 ரன்களும், கேமரூன் கிரீன் 47 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 44 ரன்களும், ஸ்டோனிஸ் 35 ரன்களும் எடுத்துள்ளனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், மார்க் வுட் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி 287 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy