5 வது நாளாக பரபரப்பாக நடந்து வரும் 2023 ஐசிசி ஒருநாள் உலககோப்பையில், இன்று 7 வது லீக் போட்டியானது நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
டேவிட் மாலன் மற்றும் ஜோ ரூட் இடையேயான பார்ட்னர்ஷிப் அணிக்கு வலுவான தளத்தை அமைத்துக் கொடுத்தது. ஜானி பேர்ஸ்டோவ்வும் திறமையாக விளையாடினார். சிறப்பாக செயல்பட்ட டேவிட் மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடித்து 140 ரன்களை எடுத்தார். முடிவில், இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை 364 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பங்களாதேஷ் அணி விளையாடியது. அதன்படி, லிட்டன் டாஸ்க், தன்சித் ஹசன் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஒரு புறம் லிட்டன் டாஸ்க் சிறப்பாக விளையாட, தன்சித் ஹசன் 1 ரன் மட்டுமே எடுத்து, கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் மற்றும் ஹசன் மிராஸ் ஆகிய மூவரும் பெரிதாக சோபிக்காமல் வந்த வேகத்தில் வெளியேறினார்கள். நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த லிட்டன் டாஸ்க் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் என பறக்கவிட்டு அரைசதம் கடந்த நிலையில், 76 ரன்களை எடுத்து களத்தை விட்டு வெளியேறினார்.
இதன்பிறகு முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹ்ரிடோய் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, முஷ்பிகுர் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து தவ்ஹித் ஹ்ரிடோயும் ஆட்டமிழந்தார். மகேதி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது ஆகியோர் ஓரளவு ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
இறுதியில், பங்களாதேஷ் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக லிட்டன் டாஸ்க் 76 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 51 ரன் எடுத்துள்ளார்கள். இங்கிலாந்து அணியில் ரீஸ் டோப்லி 4 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…