#ENGvBAN: பங்களாதேஷ் அணியை 124 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து!
உலகக்கோப்பை தொடரின் இன்றைய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 124 ரன்களில் சுருண்ட பங்களாதேஷ்.
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இன்றை நாளில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மஹ்முதுல்லாஹ் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் விளையாடி வருகிறது.
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், முகமது நயிம் ஆகியோர் மொயின் அலி பந்தில் விக்கெட்டை இழந்தனர்.
இதன்பின் வந்த ஷகிப் அல் ஹசன் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, முஷ்பிகுர் ரஹீம் 29 ரன்களில் அவுட்டானார். இதுவே தனி வீரரின் அதிகபட்ச ரன்னாகும். பின்னர் வந்த வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழக்க, நாசூம் அகமது அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 19 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு பங்களாதேஷ் அணி 124 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து பந்துவீச்சை பொறுத்தளவில் மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன் தலா 2, டைமல் மில்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு 125 ரன்களை வெற்றி இலக்காக பங்களாதேஷ் நிர்ணயம் செய்துள்ளது.