ENGvsBAN 1st
இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலககோப்பையானது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை தொடங்கிய 7 வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் பலப்பரிட்சை செய்து வருகின்றன. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதன்படி ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக முதலில் களத்தில் இறங்கினர். இதில் பேர்ஸ்டோவ் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். அவருடன் விளையாடிய டேவிட் மாலன் அதிரடியாக விளையாடி, பங்களாதேஷ் அணியின் பந்துகளை பறக்க விட்டு அரைசதம் அடித்தார்.
இதனைத் தொடர்ந்து பேர்ஸ்டோவ் 52 ரன்களில் ஆட்டமிழக்க, அவரையடுத்து ஜோ ரூட் களமிறங்கினார். டேவிட் மாலன் மற்றும் ஜோ ரூட் இடையேயான பார்ட்னர்ஷிப் அணிக்கு வலுவான தளத்தை அமைத்துக் கொடுத்தது. சிறப்பாக செயல்பட்ட டேவிட் மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடித்து 140 ரன்களை எடுத்தார். ஆனால், மஹேதி ஹசன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு களமிறங்கிய ஜோஸ் பட்லர் 20 ரன்களில் வெளியேற, அபாரமாக விளையாடிக்கொண்டிருந்த ஜோ ரூட் 82 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், பங்களாதேஷ் அணி வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓரளவு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ஆனாலும் கூட ஜோ ரூட், டேவிட் மாலன் அடித்த ரன்கள் பங்களாதேஷ் அணிக்கும் இமாலய இலக்காக மாறியது.
முடிவில், 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை 364 ரன்கள் குவித்தது. இதில் டேவிட் மாலன் 140 ரன்களும், ஜோ ரூட் 82 ரன்களும், பேர்ஸ்டோவ் 52 ரன்களும் குவித்தனர். பங்களாதேஷ் அணியில் மஹேதி ஹசன் 4 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். தற்போது, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பங்களாதேஷ் அணி விளையாடி வருகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…