#ENGvBAN : டாஸ் வென்ற வங்கதேசம்.! பேட்டிங்கில் களமிறங்கும் இங்கிலாந்து.!
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய உலக கோப்பை தொடரில் இதுவரையில் 6 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று 7 மற்றும் 8வது என இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தற்போது முதல் போட்டியானது நடப்பு உலக்கோப்பை சாம்பியன் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
இந்த போட்டியானது ஹிமாச்சல் பிரதேஷம் , தர்மசாலா கிரிகெட் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், சாஹிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணியும் களமிறங்குகின்றன. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் சாஹிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளனர். தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங்கிற்கு தயாராகி வருகிறது.
இங்கிலாந்து அணி சார்பாக கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லி ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
அதே போல, வங்கதேச அணி சார்பாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் தலைமையில் தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம்(w), தவ்ஹித் ஹிரிடோய், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.