#ENGvAUS : யாருக்கும் வெற்றி – தோல்வி இல்லை.. சமனில் முடிந்த ஆஷஸ் தொடர்.!

The Ashes 2023 5th Test

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் முக்கியமான போட்டிகளில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர். இந்த போட்டியானது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையில் நடைபெறும். இதில் வெற்றி பெறுவது இரு அணிகள் வீரர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று.

ஏற்கனவே நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளில் வென்று இருந்தது. இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று இருந்தது. ஒரு போட்டி சமனில் முடிந்திருந்தது. இதனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் எனது எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஷஸ் டெஸ்ட் டெஸ்ட் தொடரை 2-2 என்ற வெற்றி கணக்கில் தொடரை சமன் செய்து யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி ஆசஸ் தொடர் நிறைவு பெற்றது.

ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது கடந்த 27ஆம் தேதி வியாழன் அன்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இங்கிலாந்த அணி தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடியது. முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் இங்கிலாந்து அணி எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 85 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி தனது முதலில் இன்னிங்சை தொடங்கியது. இதில் 10 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 71 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடத் துவங்கியது. முதல் இன்னிங்ஸ் போல் அல்லாமல் இரண்டாவது இன்னிங்சில் நல்ல ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தி இருந்தது. ஜோ ரூட் 91 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 42 ரன்கள், பார்ஸ்டோ 78 ரன்களும், டக்கட் 48 ரன்கள் எடுத்திருந்தனர். இறுதியில் 10 விக்கெட் இழப்புக்கு 395 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி. இதன் மூலம் 383 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனால் இரண்டாவது இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாட துவங்கியது.

தொடரை வெற்றி பெற தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். டேவிட் வார்னர் 60 ரன்கள் எடுத்திருந்தார், உஸ்மான் 72 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்டீவன் ஸ்மித் 54 ரன்களும், டேவிட் ஹெட் 43 ரன்களும், அலெக்ஸ் கேரி 28 ரன்களும் எடுத்திருந்தனர். இதனை அடுத்து வந்த வீரர்கள் குறைவான ரன்களில் அவுட் ஆக பத்து விக்கெட் இழப்புக்கு 334 எண்கள் மட்டுமே ஆஸ்திரேலியா அணி எடுத்திருந்தது. இதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் ஆஸ்திரேலியா அணி தோல்வி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை 2-2 எனும் வெற்றி கணக்கில் சமன் செய்து விட்டது. இதனால் இந்த வருடம் ஆஷஸ் தொடர் யாருக்கும் வெற்றி தோல்வி இன்று அமைந்து விட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்