#ENGvAUS: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு!
உலகக்கோப்பை தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்றில் இன்றைய தினத்தின் 2வது போட்டியான இயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. சூப்பர் 12 குரூப் 1-வில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இரு அணிகளுக்கிடையேயான இன்றை போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இன்றைய தினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், இயோன் மோர்கன்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், டைமல் மில்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.