ENGvAFG : டாஸ் வென்ற இங்கிலாந்து.! பேட்டிங்கிற்கு தயாரான ஆப்கானிஸ்தான்.! 

ENG VS AFG

உலக்கோப்பை  2023 இன்றைய ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதவுள்ளன. உலக கோப்பை லீக் தொடரில் 13வது போட்டியாக நடைபெற உள்ள இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் துவங்க உள்ளது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேட்பான் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார் . இதனால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆப்கானித்தான் வீரர்கள் தயாராகி உள்ளனர்.

சிக்ஸர் அடித்து நடுவரிடம் பைசெப்ஸ் காட்டிய ஹிட்மேன் ..!

முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து முதல் போட்டியில்  நியூசிலாந்துடன் தோல்வியும், வங்கதேசத்துடன் ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. அதே போல ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசம் மற்றும் இந்தியா என இரு அணிகளுடனும் விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சார்பாக கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையில்,  ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹா ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

இங்கிலாந்து அணி சார்பாக, கேப்டன் ஜாஸ் பட்லர் தலைமையில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லி ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்