என்னது பயிற்சி இல்லையா?..விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மெக்கல்லம்!

எங்களுடைய வீரர்கள் சோம்பேறி இல்லை என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் பேசியிருக்கிறார். 

McCullum

இங்கிலாந்து : இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி கடும் தோல்வியை சந்தித்திருந்த நிலையில், அணியில் பயிற்சி சரியாக இல்லை அது தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனங்கள் குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் பேசியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நாங்கள் எங்களுடைய அணியில் காயங்களால் பாதிக்கப்பட்ட சில வீரர்களைக் வைத்து தான் விளையாடி வருகிறோம். இப்படி இருக்கின்ற சூழ்நிலையில், தொடர்ச்சியாக பெரிய போட்டிகள் உள்ளதால், முழுமையான உடல் தயார்நிலையை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.அப்படி இருந்தாலும் நாங்கள் எங்கள் அணுகுமுறையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

சமீப காலமாக நாங்கள் அதிகமாக நீண்ட சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட போட்டிகளில் விளையாடி வருகிறோம். அந்த பயணங்களில் சில நாட்களில் பயிற்சிக்கான இடைவெளிகள் இருந்தாலும், வீரர்கள் கடுமையாக அந்த நேரத்திலும் உழைத்துள்ளனர் என்பது தான் உண்மை. மற்றபடி பயிற்சி எடுக்கவில்லை ..பயிற்சி செய்யும் நேரத்தில்  சோம்பேறித்தனமாக இருந்தனர் என்று விமர்சனம் செய்யவேண்டாம்.

நான் தலைமை பயிற்சியாளராக சொல்லவில்லை..உண்மையில் எங்கள் வீரர்கள் திறமையில் சிறந்தவர்கள். அப்படியான நம்பிக்கையை நாங்கள் அவர்களுக்கு கொடுக்கும்போது தான் அவர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள். தோல்விகள் என்பது ஏமாற்றமளிக்கலாம். ஆனால் அந்த தோல்விகளில் இருந்து செய்த தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்புகளும் அதற்கான பலமும் கிடைக்கும். எங்களுக்கு அந்த பலன் கிடைத்துள்ளது. எனவே, வருகின்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம்” எனவும் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு எதிரான இந்த தோல்வியை தொடர்ந்து இங்கிலாந்து அணி முறையான திட்டமிடலுடன் செயல்பட்டு, சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக வீரர்களின் உடல்தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMKProtest
gold price
virat kohli lion
CrimeAgainstWomen
LIVE DMK
Maaveeran sk
rachin ravindra