#INDvENG: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து
3 ஆம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது.இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு இங்கிலாந்து செய்தது.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
விராட் கோலி(கேப்டன்),ரோகித் சர்மா, ஷுப்மான் கில், சத்தேஸ்வர் புஜாரா, ரகானே, ரிஷப் பந்த், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.