டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு!
இந்தியா மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா தனது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனிடையே, இந்திய மகளிர் அணி பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, லார்ட்ஸில் நடைபெறும் இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதனால், இன்றைய போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார்.
இந்திய அணி வீரர்கள்: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, யாஸ்திகா பாட்டியா(வ), ஹர்மன்ப்ரீத் கவுர்(C), ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், தயாளன் ஹேமலதா, ஜூலன் கோஸ்வாமி, ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள்: டாமி பியூமண்ட், எம்மா லாம்ப், சோபியா டன்க்லி, ஆலிஸ் கேப்ஸி, டேனியல் வியாட், ஆமி ஜோன்ஸ்(W/C), ஃப்ரேயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், கேட் கிராஸ், ஃப்ரேயா டேவிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.