பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து தொடரை வென்ற இங்கிலாந்து..!

Default Image

3 ஒருநாள் போட்டியையும் இங்கிலாந்து வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது. 

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 331 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 158 ரன்கள் குவித்தார். 332 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 332 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் அதிகபட்சமாக 102 ரன்கள் எடுத்தார்.

முதலில் விளையாடிய 3 ஒருநாள் போட்டியையும் இங்கிலாந்து வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது.  இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்