இன்று ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 40-ஆவது லீக் போட்டியில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடங்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன் இருவரும் களமிறங்கினர். வழக்கம்போல தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சிறப்பாக விளையாடாமல் 15 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து ஜோ ரூட் இறங்க தொடங்கவீரர் டேவிட் மாலன் சிறப்பாக விளையாடி அரைசதம் பூர்த்தி செய்தார். இருப்பினும் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 28 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் பென் ஸ்டோக்ஸ் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த தொடக்க வீரர் டேவிட் மாலன் 87 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். டேவிட் மலான் 87 ரன்களில் ஆட்டமிழந்து தனது அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் நடு ஓவர்களில் இங்கிலாந்து அணி சற்றுத் தடுமாறியது. காரணம் ஜோ ரூட் (28), ஹாரி புரூக் (11), ஜோஸ் பட்லர் (5), மொயீன் அலி (4) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் மத்தியில் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் மற்றும் களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் கை கோர்த்து சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி 84 பந்தில் 6 பவுண்டரி , 6 சிக்ஸர் என மொத்தம் 108 ரன்கள் குவித்தார். மறுபக்கம் விளையாடிய கிறிஸ் வோக்ஸ் அரைசதம் விளாசி 51 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 339 ரன்கள் குவித்தனர். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 3 விக்கெட்டையும், லோகன் வான் பீக், ஆர்யன் தத் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 340 ரன்கள் இலக்குடன் நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி பாரேசி ,மேக்ஸ் ஓ டவுட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் பொறுமையுடன் விளையாடி வந்தனர்.
இருப்பினும் மேக்ஸ் ஓ டவுட் 5-வது ஓவரில் வெறும் 5 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கொலின் அக்கர்மேன் 2 பந்துகளில் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர் சைபிரண்ட் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த தொடக்க வீரர் வெஸ்லி பாரேசி 37 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். மத்தியில் இறங்கிய ஸ்காட் எட்வர்ட்ஸ் , சைபிரண்ட் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனாலும் ஸ்காட் எட்வர்ட்ஸ் 38, சைபிரண்ட் 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்காமால் விக்கெட்டை இழக்க இறுதியாக நெதர்லாந்து அணி 37.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 179 ரன்கள் எடுத்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியில் அடில் ரஷித் , மொயின் அலி தலா 3 விக்கெட்டையும் , டேவிட் வில்லி 2 விக்கெட்டையும் , கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டை பறித்தனர்.
இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் விளையாடி 1போட்டியில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை முன்பு இழந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தனது 2 போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு இங்கிலாந்து அணி தனது 8 -வது போட்டி(இன்றைய) வெற்றி பெற்றுள்ளது.
நெதர்லாந்து அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…