இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காமல் இருந்த விராட் கோலி இப்போட்டியில் இடம்பெற்றார்.
இங்கிலாந்து பேட்டிங்:
இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜே ராய்(23) மற்றும் ஜே பேர்ஸ்டோவ்(38) ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
அதன் பின்பு களமிறங்கிய ரூட்(11), ஸ்டோக்ஸ்(21), பட்டலர்(4) சொற்ப ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
லிவிங்ஸ்டோன்(33), மொயின்(47) மற்றும் , டி வில்லி(41) ஆகியோர் அணியின் ரன்னை உயர்த்தினர்.அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி 49 ஓவர்கள் முடிவில் 246 ரன்களை எடுத்தது
சாஹல் 4 விக்கெட்களையும் , பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 பின்னர் ஷமி மற்றும் பிரசித் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இந்தியா பேட்டிங்:
அதன் பின்பு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது l. ரோஹித் ஷர்மா ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து தவான்(9), கோலி (16) என விக்கெட்டுகள் மலமலவென வீழ்ந்தது.
சூர்ய குமார் யாதவ்,ஹர்திக் பாண்டியா,ஜடேஜா மற்றும் ஷமி ஆகியோர் சற்று நிதானமாக ஆடினாலும் 30 ரன்களை தாண்டாமல் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக இந்திய அணி 38.5 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இங்கிலாந்து பந்துவீச்சாளர் டாப்லி 6 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்று சமனில் உள்ளது.மூன்றாவது போட்டி வருகிற 17 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தியா லெவன்: ரோஹித் சர்மா(கே), எஸ் தவான், வி கோஹ்லி, எஸ் யாதவ், ஆர் பந்த் (வி.கே), எச்.பாண்டியா, ஆர்.ஜடேஜா, எம். ஷமி, ஜே பும்ரா, பி.கிருஷ்ணா, ஒய் சாஹல்.
இங்கிலாந்து லெவன்: ஜே ராய், ஜே பேர்ஸ்டோவ், ரூட், பி ஸ்டோக்ஸ், ஜே பட்லர்(கே/வி) , எல் லிவிங்ஸ்டோன், எம் அலி, சி ஓவர்டன், டி வில்லி, பி கார்ஸ், ஆர் டாப்லி.