தொடர் வெற்றியால்.. டி20 தொடரை பைப்பற்றிய இங்கிலாந்து.!

Default Image

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3 T20, 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பின்ச் 40 ரன்கள் அடித்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.5 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்டலர் அதிகபட்சமாக 77 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்