4-நாள் ஆட்டம் முடிவு- 291 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி..!

Published by
murugan

4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 32 ஓவரில் 77 ரன்கள் எடுத்துள்ளனர்.

இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் 127, புஜாரா 61, பண்ட் 50, ஷர்துல் தாக்கூர் 60 ரன்கள் எடுக்க இறுதியாக இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 3, மொயீன் அலி, ஒல்லி ராபின்சன் தலா 2, கிரேக் ஓவர்டன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

368 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில், 4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 32 ஓவரில் 77 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ரோரி பர்ன்ஸ் 31, ஹசீப் ஹமீது 43 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி வெற்றிபெற 291 ரன்கள் தேவை.

Published by
murugan

Recent Posts

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…

12 minutes ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

13 minutes ago

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய்  ரெசிபியை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…

20 minutes ago

ஏலியன்களால் கடத்தல்? 3000 ஆண்டுகளுக்கு முன்பே ‘X’ தள கணக்கு தொடங்கிய மஸ்க்!

ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…

49 minutes ago

“மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்., இல்லையென்றால்.,” அன்புமணி ஆவேசம்!

டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…

1 hour ago

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…

2 hours ago