4-நாள் ஆட்டம் முடிவு- 291 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி..!
4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 32 ஓவரில் 77 ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் 127, புஜாரா 61, பண்ட் 50, ஷர்துல் தாக்கூர் 60 ரன்கள் எடுக்க இறுதியாக இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 3, மொயீன் அலி, ஒல்லி ராபின்சன் தலா 2, கிரேக் ஓவர்டன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
368 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில், 4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 32 ஓவரில் 77 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ரோரி பர்ன்ஸ் 31, ஹசீப் ஹமீது 43 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி வெற்றிபெற 291 ரன்கள் தேவை.