இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 132.2ஓவரில் 432 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியை இங்கிலாந்து அணி 40.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை பறித்தனர். இதனால், இந்திய அணி 78 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 42 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 120 ரன்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டை பறிக்க முதல் நாளில் இந்திய அணி திணறியது. இதைத்தொடர்ந்து, நேற்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 61 , ஹசீப் ஹமீது 68 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய டேவிட் மாலன், கேப்டன் ஜோ ரூட் இருவரும் கூட்டணி அமைத்து அணியை சிறப்பாக உயர்த்தினர்.
நிதானமாக ஆடிய டேவிட் மாலன் 70 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அதிரடியாக விளையாடி வந்த ஜோ ரூட் சதம் விளாசி 127 ரன்கள் குவித்தார். அடுத்து களம் கண்ட அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை. 2-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 129 ஓவரில் 8 விக்கெட் இழந்து 423 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இன்று 3-ஆம் ஆட்டம் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கிரேக் ஓவர்டன் 32 ரன்னும், ராபின்சன் ரன் எடுக்காமலும் விக்கெட்டை பறிகொடுக்க இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 132.2 ஓவரில் 432 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்டையும், சிராஜ், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டை பறித்தனர். தற்போது இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. இந்தியா 12 ஓவர் முடிவில் 18 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ரோஹித் 12 , கே.எல்.ராகுல் 6 ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…