INDvENG : இங்கிலாந்தை சுழற்றிய ஜடேஜா! இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் எடுத்துள்ளது.

INDvENG 2nd ODI 1st innings

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இறுதியாக நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வருகிறது.

இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும் எடுத்தனர்.

பிலிப் சால்ட் 26 ரன்களும், ஹாரி புரூக் 31 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 34 ரன்களும்,  ஜேமி ஓவர்டன் 6 ரன்களும், கஸ் அட்கின்சன் 3 ரன்களும், அடில் ரஷித் 14 ரன்களும், லிவிங்ஸ்டன் 41 ரன்களும் எடுத்து அவுட் ஆகி வெளியேறினர். மார்க் வுட் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகினார்.

இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார். வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, முகமது சமி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி 50 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி வேண்டிய நிலையில் 2வது இன்னிங்ஸில் விளையாட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்