இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது கோலி தலைமையிலான இந்திய அணி.
இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதனத்தில் நடைபெற்று வந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 32 ஓவரில் 77 ரன்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி மற்றும் 5-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த டேவிட் மாலன் 5 ரன் எடுத்து வெளியேற, சிறப்பாக விளையாடிய ஹசீப் ஹமீது 63 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். பிறகு களம்கண்ட ஒல்லி போப் 2, ஜானி பேர்ஸ்டோ ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆனார்கள். அடுத்து இறங்கிய மொயின் அலி ரன் எடுக்காமலும் விக்கெட்டை கொடுக்க, இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அடுத்தடுத்து வந்த இங்கிலாந்து அணி வீரர்கள், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 92.2 ஓவரில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பாக உமேஷ் யாதவ் 3, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், 1-2 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்த 4வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி 50 ஆண்டுகளுக்கு பிறகு லண்டன் ஓவல் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. தொடரின் இறுதி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி இந்தியா வெற்றி பெற்றது மூலம் ரோஹித் சர்மா ஆட்ட நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பித்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…