ENGLAND vs INDIA:விராத் கோலி ஒருவழியாக எட்டிய புதிய உலக சாதனை!பிராண்டன் மெக்கலம் சாதனை முறியடிப்பு!
இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் பயணித்தது. மான்செஸ்டரில் முதலாவது 20-ஓவர் ஆட்டம் நேற்று தொடங்கியது.
நேற்று முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பமே அமர்களமாக மாறியது,ஜெய்சன் ராய் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார்.பின்னர் இறங்கிய ஹய்லஸ் குல்தீப் சுழலில் சிக்கி ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் குல்தீப் வீசிய 14-வது ஓவரில் மோர்கன் 7,பைர்ஸ்டோவ் 0, ரூட் 0 ரன்களில் தொடர்ச்சியாக வெளியேறினார்.இதன் மூலம் குல்தீப் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்சியாக மொயீன் அலி 6,பட்லர் 69,ஜோர்டன் 0 ரன்களில் வெளியேறினர்.20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 4 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகள் எடுத்து 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய இந்திய 160 என்ற வெற்றி இலக்கை 18.2 ஓவர்களில் எட்டியது.இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்துவரை ராகுல் அபாரமாக விளையாடி 101 ரன்கள் அடித்தார்.இது இவருக்கு இரண்டாவது சதம் ஆகும்.மேலும் ரோகித் 32, தவான் 4,விராட் கோலி 20 ரன்கள் அடித்தனர்.இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் அயர்லாந்து அணியுடன் 17 ரன்கள் அடித்தால் விராட் கோலி இருவது ஓவர் போட்டிகளில் 2000 ரன்கள் தாண்டி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவர் முதலாவது மற்றும் இரண்டாவது இருபது ஓவர் போட்டிகளில் 0,9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் விராத் கோலி 20 ரன்கள் அடித்தார்.இதன் மூலம் 2000 ரன்களை அடித்தார்.60 இருபது ஓவர் போட்டிகளில் 56 இன்னிங்சில் விளையாடிய விராத் 2012 ரன்கள் அடித்துள்ளார்.நேற்றைய போட்டியில் 8 ரன்கள் எடுத்தபோது விராத் 2000 ரன்களை தாண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன் நியூசீலாந்து அணியின் பிரான்டன் மெக்கலம் 66 இன்னிங்சில் 2000 ரன்களை எட்டினார்.