ENGLAND VS INDIA:விராட் கோலி அபார சதம் ..!இங்கிலாந்தில் முதல் சதம் அடித்து சாதனை …!
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது .
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பின்னர் நேற்று பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் அடித்தது.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டு ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்தது.89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் மட்டும் அடித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,முகமது சமி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள்,ஜானி 70 ரன்களும் அடித்தனர்.
இதன் பின் முதலாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 65 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் அடித்ததுள்ளது.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.இது அவருக்கு இங்கிலாந்தில் முதல் சதம் ஆகும்.களத்தில் அவருடன் உமேஷ் 1 ரன்களுடன் உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.