ENGLAND VS INDIA:விராட் கோலியின் கீழ் அஷ்வின் செய்த மகத்தான சாதனை …!

Default Image

முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் மட்டும் அடித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,முகமது சமி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள்,ஜானி 70 ரன்களும் அடித்தனர்.
இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். களத்தில் உமேஷ் 1 ரன்களுடன் இருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சாம் குரான் 4 விக்கெட்டுகள்,அன்டர்சன்,ஸ்டோக்ஸ்,ரஷித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் நேற்று  விளையாடிய இங்கிலாந்து அணி  53 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 180 ரன்கள் மட்டுமே அடித்ததது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் மற்றும் இஷாந்த் சர்மா 5 மற்றும் உமேஷ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இதனால் இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனிடையே இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இதில் முதல் இன்னிங்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,இரண்டாவது இன்னிங்சில்  3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.இரண்டிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் தலைமையில் விளையாடி அஷ்வின் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் ஒரு கேப்டன் தலைமையில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஷ்வின் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் வார்னே இரண்டாம் இடத்தில் உள்ளனர்.வார்னே பாண்டிங் தலைமையில் இந்த சாதனையை படைத்துள்ளார்.இருவரும் 34 போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
முதலிடத்தில்இலங்கையின்   முரளிதரன் உள்ளார்.அவர் 30 போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்