ENGLAND vs INDIA:ரோகித் சர்மா அதிரடி அரை சதம்!இந்திய அணி ரன் குவிப்பு!
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது T 20 கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.பேட் செய்த இங்கிலாந்து அணி ஜெய்சன் ராய், மற்றும் ஜோஸ் பட்லர், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
முதலில் ஜோஸ் பட்லர் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அணியின் ரன்கள் 103 எட்டிய நிலையில் ஜெய்சன் ராய் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஹேல்ஸ் 30 ரன்களில், மோர்கன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஸ்டோக்ஸ் 14 ரன்களில், ஜோனி 25 ரன்களிழும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக அட்டா நேர முடிவில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் களமிறங்கினர். இதில் இந்திய அணி 21 ரன்கள் எடுத்த நிலையில் தவான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ராகுல் 19 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இந்நிலையில் இந்திய வீரர் ரோகித் சர்மா தனது அரை சதத்தை 28 பந்துகளில் அடித்தார்.இது இவருக்கு 16 வது சதமாகும்.இந்திய அணி தற்போது வரை 8.2 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது.
ரோகித் 52 மற்றும் விராத் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.