இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் சென்றுள்ளது.இதன்படி இந்திய அணி முதலாவது இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பின்னர் கடைசி இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.இந்த ஆட்டம் நட்டிங்கமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ச்சில் நடைபெறுகின்றது.
சமீபத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 5-0 என்ற கணக்கில் வைட்-வாஸ் செய்தது .இதனால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.இந்திய அணியை பார்க்கும் போது தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் நிலையில் ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இன்றைய ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய்( 38)மற்றும் ஜானி பைர்ஸ்ஸ்டோ( 38)குல்தீப் சுழலில் விக்கெட்டை பரிக்கொடுத்தனர்.பின்னர் இறங்கிய ரூட் மற்றும் கேப்டன் மோர்கனும் இந்திய அணியின் சுழலில் விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.
தற்போது பென் ஸ்டோக்ஸ் (18) மற்றும் பட்லர்(15) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.இங்கிலாந்து அணி 25 ஓவர்களில் 135 ரன்கள் அடித்துள்ளது.இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் 3 விக்கெட்டுகள் மற்றும் சாஹல் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…