ENGLAND vs INDIA:புதிய உலக சாதனை படைத்த தோனி!பாகிஸ்தான் வீரரை பின்னுக்குத்தள்ளி தோனி முதலிடம்!

அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் வெற்றி பெற்று போட்டியை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.பின்னர் இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் பயணித்தது. மான்செஸ்டரில் முதலாவது 20-ஓவர் ஆட்டம் இன்று தொடங்கியது.

இன்று முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பமே அமர்களமாக மாறியது,ஜெய்சன் ராய் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார்.பின்னர் இறங்கிய ஹய்லஸ் குல்தீப் சுழலில் சிக்கி ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் குல்தீப் வீசிய 14-வது ஓவரில் மோர்கன் 7,பைர்ஸ்டோவ் 0, ரூட் 0 ரன்களில் தொடர்ச்சியாக வெளியேறினார்.இதன் மூலம் குல்தீப் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி ரூட் ஸ்டம்ப்பிங்கை எடுத்ததால் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.அதிக ஸ்டம்ப்பிங் செய்த வீரர்களில் இருபது ஓவர் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மலை முந்தி தோனி முதலிடம் பிடித்தார்.இவர் ரூட் ஸ்டம்ப்பிங்கை செய்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார்.தற்போது  இருபது ஓவர் போட்டிகளில் 33 ஸ்டம்ப்பிங்கை செய்து முதலிடம் பிடித்துள்ளார். இன்று மொத்தம் இரண்டு ஸ்டம்ப்பிங் ஓன்று ரூட் மற்றொன்று பைர்ஸ்டோவ் ஆகும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்