ENGLAND VS INDIA:தரவரிசையில் விராட் கோலியை விரட்டிவிட்டு முன்னேறிய லோகேஷ் ராகுல்..!விராட் கோலிக்கு பின்னடைவு

Published by
Venu

இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் சென்றுள்ளது.இதன்படி இந்திய அணி முதலாவது இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கடைசி இருபது ஓவர் போட்டி நேற்று முன்தினம்  இங்கிலாந்தின் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பேட் செய்த இங்கிலாந்து அணி ஜெய்சன் ராய், மற்றும் ஜோஸ் பட்லர், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

முதலில் ஆடிய  இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் இந்திய அணி பேட்டிங் செய்தது .

பின்னர் இந்திய அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் அதிரடி வீரர் லோகேஷ் ராகுல் சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.முதலாவது  இருபது ஓவர் போட்டியில்  அவர் (101*) ரன்கள் அடித்தார்.இதன் மூலம் அவர் சர்வதேச தரவரிசையில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.இதற்கு முன் இவர் 12வது இடத்தில் இருந்தார்.812 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் ராகுல் உள்ளார்.

மேலும் இந்திய அணி  கேப்டன் விராட் கோலி, 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

25 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

1 hour ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

16 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

17 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

21 hours ago