இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் சென்றுள்ளது.இதன்படி இந்திய அணி முதலாவது இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பின்னர் கடைசி இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.இந்த ஆட்டம் நட்டிங்கமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ச்சில் நடைபெறுகின்றது.
சமீபத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 5-0 என்ற கணக்கில் வைட்-வாஸ் செய்தது .இதனால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.இந்திய அணியை பார்க்கும் போது தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் நிலையில் ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இன்றைய ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய்( 38)மற்றும் ஜானி பைர்ஸ்ஸ்டோ( 38)குல்தீப் சுழலில் விக்கெட்டை பரிக்கொடுத்தனர்.பின்னர் இறங்கிய ரூட் மற்றும் கேப்டன் மோர்கனும் இந்திய அணியின் சுழலில் விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.பின்னர் இங்கிலாந்து அணி வீரர் பட்லர் அரைசதம் அடித்துள்ளார்.
தற்போது பென் ஸ்டோக்ஸ் (38) மற்றும் பட்லர்(50) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.இங்கிலாந்து அணி 34 ஓவர்களில் 195 ரன்கள் அடித்துள்ளது.இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் 3 விக்கெட்டுகள் மற்றும் சாஹல் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்க
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…